உடல்நோயை விட மனநோய் கொடியது உடல்நோயை மருந்துகளால் குணப்படுத்தி விடலாம், ஆனால் மனநோயை மருந்துகளால் குணப்படுத்த முடியாது. ஆகையால் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் வாழ்வில் மகிச்சியாக இருங்கள்.
தன்னுடைய தவறுகளை உணர்ந்தவர்கள் திருந்தி விடுவார்கள், ஆனால் தன்னுடைய தவறுகளை நியாயப்படுத்துபவர்கள் வாழ்க்கையில் திருந்தவே மாட்டார்கள் .
சில தவறுகள் நாம் யார் என்று சொல்லிவிடும், சில தவறுகள் நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை சொல்லிவிடும்.
மனிதன் வியாபாரம் செய்ய பணத்தை கண்டுபிடித்தான் ஆனால் இன்று பணம் மனிதனை வைத்து வியாபாரம் செய்கிறது.
அன்பு என்பது நெல் மாதிரி போட்டால் தான் முளைக்கும், வம்பு என்பது புல் மாதிரி எதுவும் போடாமலே முளைக்கும்.
புயல் புல்லை வளைக்கத்தான் முடியும், ஒடிக்க முடியாது.
எதிலும் குறை காண்பவர்களுக்கு எதையும் ரசிக்க தெரியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக