அன்றும் இன்றும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்றும் இன்றும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 மே, 2022

அன்றும் இன்றும்


 அன்று வீடு நிறைய குழந்தைகள் 

இன்று வீட்டுக்கொரு குழந்தை 

அன்று பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்

இன்று சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்

அன்று குறைந்த வருமானம் நிறைந்த நிம்மதி 

இன்று நிறைந்த வருமானம் குறைந்த நிம்மதி 

அன்று படித்தால் வேலை

இன்று படிப்பதே வேலை

அன்று வீடு நிறைய உறவுகள்

இன்று உறவுகள் அற்ற வீடுகள்.

அன்று  உணவே மருந்து

இன்று மருந்தே உணவு

அன்று முதுமையிலும் துள்ளல்

இன்று இளமையிலேயே அல்லல்

அன்று உதவிக்கு தொழில் நுட்பம்

இன்று தொழில் நுட்பமே உதவி

அன்று யோக வாழ்க்கை

இன்று எந்திர வாழ்க்கை 

அன்று தியாகம் நாட்டை காப்பாற்றியது

இன்று துரோகம் நாட்டை கூறுபோடுகிறது

அன்று படங்களில் பாடல் கருத்தானது. 

இன்று கருத்தே இல்லாத பாடலானது

அன்று  ஓடினோம் வயிற்றை நிறைக்க 

இன்று ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க

அன்று பெரியோர்கள் பாதையில்

இன்று இளைஞர்கள் போதையில் 

அன்று  ஒரே புரட்சி 

இன்று ஒரே வறட்சி

அன்று வளச்சிப்பாதையில் இளைஞர்கள்.

இன்று போதையின் பிடியில் இளைஞர்கள்.

அன்று ஊரே கூட கோலாகல விழா

இன்று ஊருக்கே போக முடியாத மூடுவிழா 

அன்று கைவீசி நடந்தோம்

இன்று கைப்பேசியுடன் நடக்கிறோம்

அன்று ஜனநாயகம்

இன்று பணநாயகம்

அன்று விளைச்சல் நிலம்

இன்று விலை போன நிலம்

அன்று தொட முடியாத உச்சத்தில் காதல்

இன்று தொட்டு முடியும் எச்சம் காதல்

அன்று கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்

இன்று கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.

அன்று நிறைந்தது மகிழ்ச்சி

இன்று மகிழ்வை தேடும் நிகழ்ச்சி

அன்று வாழ்ந்தது  வாழ்க்கை

இன்று ஏதோ வாழ்கிறோம் வாழ்க்கை..

இதுவும் கடந்துபோகும்.

ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை பயணம்

ஆச்சி மனோரமாவின் உண்மையான இயற்பெயர் கோபி சாந்தா, 1943 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மன்னார்குடி என்கின்ற இடத...