வியாழன், 9 மார்ச், 2023

ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை பயணம்

ஆச்சி மனோரமாவின் உண்மையான இயற்பெயர் கோபி சாந்தா, 1943 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மன்னார்குடி என்கின்ற இடத்தில் தந்தையார் காசிக்கிழார்குடையார் என்பவருக்கும் தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாக பிறந்தார், ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வியை பொறுத்தவரைக்கும் வறுமை மற்றும் பல குடும்ப பிரச்சனை காரணமாக இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் இருக்கக்கூடிய பள்ளத்தூர் என்ற இடத்திற்கு குடி பெயர்ந்தார்கள்.

அவர் தன்னுடைய பள்ளி படிப்பை பள்ளத்தூரில் இருக்கக்கூடிய ஒரு ஆரம்ப பள்ளியில் தொடங்கினார், அவர் சின்ன வயசுல இருந்தே பாடுவதில் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தார். ஒரு காலகட்டத்தில் அவர்கள் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே தன்னோட பள்ளி படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையை பராமரிக்கிற வேலைக்கு வந்து சேர்ந்தார் நம்ம ஆச்சி மனோரமா, ஒருநாள் அவருடைய ஊரில் அந்தமான் காதலி என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள்.அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாகபாட வரவில்லை, அதனால் ஆச்சி மனோரமாவை அதுல நடிக்க வைத்தார்கள்,  அந்த நாடகத்தில் இவரோட பாட்டையும் குரல் இனிமையும் நடனத்தையும் பார்த்த எல்லாருமே இவரை வெகுவாக பாராட்டினார்கள்.

இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணிய உதவியாளர் திருவேங்கடம் ஹார்மோனியம் வஸ்து தியாகராஜன் அவருடைய பெயரை மனோரமா என்று மாற்றினார்,ஆச்சி மனோரமா தொடர்ந்து பல நாடகங்கள் நடிக்க தொடங்கியவர் நாடக உலகத்தோட இராணி என்று போற்றும் அளவுக்கு உயர்ந்தார்.மேலும் அவர் வைரம் நாடக சபாவில் நடித்து கொண்டு இருக்கையில் சென்னையில சில நாடகங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது ஜானகிராமன் என்பவர் இவரை தேடி வந்து தான் இன்பவாழ்வு என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறதாகவும் அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாக கூறினார், ஆச்சியும் ஒப்புக்கொண்டு நடிக்க அந்த படம் பாதியிலே நின்றுவிட்டது. அதன் பிறகு நமது கவிஞர் கண்ணதாசனோட ஊமையன்கோட்டை என்கின்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் அந்த படமும் ஆரம்பத்திலேயே நின்று போகவே மிகவும் மனம் உடைந்து போனார்.

அதன் பிறகு கண்ணதாசன் அவர்கள் 1958 ல்  மாலையிட்டமங்கை என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா துறையில் முதன்முதலாக மனோரமாக அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. பின் தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு பிறகும் பல நாடகத்தில் தொடர்ந்து நடித்து வந்தார் மாலையிட்ட மங்க, களத்தூர்கண்ணம்மா, கொஞ்சும்குமரி, பாலும்பழமும், பார்மகளேபார், திருவிளையாடல், அன்பே வா, தில்லானா மோகனாம்பாள், சரஸ்வதிசபதம்,மற்றும் ஏராளமான தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை நடித்து தந்தார், முதல் முதலாக 1958 ல் கவிஞர் கண்ணதாசன் அவங்களோட மாலையிட்ட மங்கை என்ற படத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர் இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் தன்னுடைய பெயரை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவரைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் தமிழ் துறை உலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என் டி ராமாராவ் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒரே நடிகை மனோரமா  ஆச்சி மட்டும்தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சிங்களம் என பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் தனி முத்திரை பதித்தார், அதோட மட்டும் இல்லாமல் காட்டுப்பட்டி சரித்திரம் அன்புள்ளஅம்மா, தியாகியின் மகன், வானவில், ஆட்சி அதன் பிறகு  இன்டர்நேஷனல் அன்புள்ள சினேகிதி ஆகிய  பல தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார்.

அவர்  நடிச்ச சில படங்கள பத்தி சொல்ல வேண்டுமென்றால்  மாலையிட்ட மங்கை,புதிய பாதை, நெஞ்சில் ஓர் ஆலயம், ரத்தத்திலகம், கொஞ்சம் குமரி, அன்பே வா, கந்தன்கருணை, தில்லானா மோகனாம்பாள் இது மாதிரி பல படங்களை நாம் சொல்லிக்கொண்டே போகலாம் . லேட்டஸ்ட்டா வந்து அதாவது அந்த காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரங்கள் வந்து நடித்த  படம் என்றால்  பாட்டி சொல்லை தட்டாதே நம்ம ஆளு குரு சிஷ்யன், அபூர்வ சகோதரர்கள் , நடிகன், மன்னன், எங்கிட்ட மோதாதே, மைக்கேல் மதன காமராஜன்,  நான் பெத்த மகனே, முத்துக்காளை, இந்தியன், லவ் பேர்ட்ஸ் ,அருணாச்சலம், மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி, மாயி, சாமி, பேரழகன் இது மாதிரி படங்களையும் நடிதத்தர்.

தனிப்பட்ட வாழ்க்கையை  பொருத்தவரை சபா நாடக குழுவில் நடித்த அந்த நாடக குழுவில் முக்கிய பொறுப்பில் வந்திருந்த திரு எஸ்எம் ராமநாதன் அவர்களை மனோரமா காதலிச்சாங்க அதன் பிறகு அவங்களுடைய காதலை மனோரமா ஏற்றுக் கொண்டதால்  திருச்செந்தூரில் முருகன் கோயிலில்  இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்  இவர்களுக்கு பூபதி என்கின்ற மகன்  பிறந்தார்.
இவர்  பெற்ற விருதுகளும் மரியாதையும் என்ன என்று பார்த்தால்  தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வாங்கியிருக்காங்க 1988 புதிய பாதை திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வாங்கியிருக்காங்க 2002ல் மத்திய அரசால்  பத்மஸ்ரீ விருது வாங்கிருக்காங்க ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்காங்க மலேசியா அரசிடமிருந்து சாமுவேல் சரித்திரனாகி விருது வாங்கி இருக்காங்க கேரளா அரசின் கலாசாகர் விருது வாங்கி இருக்காங்க அப்புறம் சினிமா எக்ஸ்பிரஸ் வருது சிறந்த குணசத்திர நடிகைக்கான அண்ணா அவரது என்எஸ்கே விருது எம்ஜிஆர் வருது ஜெயலலிதா விருது என பல விருதுகளை தமிழ்நாடு அரசு அவருக்கு வழங்கி கௌரவித்தது .

சினிமா உலகத்துல நகைச்சுவை என்றால் நடிகர் மட்டும் இல்ல நடிகையும் வந்து பாத்தீங்கன்னா வர முடியும் அப்படிங்கிற நிலைமையை மாற்றி காமெடியில் சாதனை படைத்த மனோரமா ஆட்சி கடைசியா சாகப்போறதுக்கு  முன்னால்  உண்மையிலேயே ரொம்ப ஒரு அனாதை மாதிரி  இருந்தார் அப்படின்னு சொல்லலாம் ஆயிரம் படங்களுக்கு  மேல்  நடிச்சிருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு அப்புறமும் கணவனால்  கைவிடப்பட்டு அதுக்கப்புறம் பிள்ளைகளாலும் வந்து கைவிடப்பட்டு ரொம்ப தனிமையில் வந்திருந்தாங்க இன்னும் சொல்லப்போனால் பல்வேறு சினிமா கலைஞர்களுக்கு மரியாதை வந்து தெரியல அப்படின்னு ரொம்ப மனம் நொந்து வந்து பேசி இருந்தாங்க யாரும் தன்னை வந்து பார்க்க  வரவில்லை  ஒரு வார்த்தை கூட வந்து நல விசாரிக்கல அப்படிங்கற மாதிரி வந்து சொல்லி இருந்தாங்க ஆட்சி மனோரமா இருந்தாலும் அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் சிவாஜி இவங்கெல்லாம் வந்து இருந்து எடுத்துக்கிட்ட அக்கறை இப்ப இருக்கக்கூடிய நடிகர் நடிகைகள் யாருமே அப்படி  இல்ல அப்படிங்கிற வருத்தத்தையும் பதிவு பண்ணி இருந்தாங்க.

 தன்னை  சுற்றி  பல நடிகர்கள்  இருந்தாலும் அனாதையாக இருக்கிறது மாதிரி வந்து உணர்றேன் அப்படிங்கிற மாதிரி வந்து சொல்லி இருந்தாங்க வரலாற்றுல ஆயிரம் படங்களுக்கு மேல வந்து நடித்து உலக புகழ்பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இந்தியாவில் 5 முதல்வர்கள் கூட நடித்த  பெருமை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னட ஹிந்தி சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்து  இருந்தார் என்று  சொல்லலாம்,ஆயிரம் படங்களுக்கு  மேல்  நடிச்சிருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு அப்புறம் கனவு நாளாய்  வந்து கைவிடப்பட்டு அதுக்கப்புறம் பிள்ளைகளாலையும்  கைவிடப்பட்டு ரொம்ப தனிமையில் வந்திருந்தாங்க இன்னும் கைவிடப்பட்டு ரொம்ப தனிமையில் வந்திருந்தாங்க.

 இன்னும் சொல்லப்போனால் பல்வேறு சினிமா கலைஞர்களுக்கு மரியாதை என்பது என்னானே வந்து தெரியல அப்படின்னு ரொம்ப மனம் நொந்து வந்து பேசி இருந்தாங்க யாரும் தன்னை வந்து பார்க்க  வரவில்லை, ஒரு வார்த்தை கூட வந்து நல விசாரிக்கவில்லை, அப்படிங்கற மாதிரி வந்து சொல்லி இருந்தாங்க ஆட்சி மனோரமா இருந்தாலும் அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் சிவாஜி இவங்கெல்லாம்  எடுத்துக்கிட்ட அக்கறை இப்ப இருக்கக்கூடிய நடிகர் நடிகைகள் யாருக்குமே இல்லை ,அப்படிங்கிற வருத்தத்தையும் பதிவு பண்ணி இருந்தாங்க தான் சுத்தி வந்து பல நடிகர் இருந்தாலும் அனாதையாக இருக்கிறது மாதிரி வந்து உணர்றேன் அப்படிங்கிற மாதிரி வந்து சொல்லி இருந்தாங்க.

வரலாற்றுல ஆயிரம் படங்களுக்கு மேல வந்து நடிச்சு உலகப் புகழ் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இந்தியாவில் 5 முதல்வர்கள் நடிச்ச பெருமை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னட ஹிந்தி சிங்களம் என ஆறு மொழிகளில் நடிச்ச குணசித்திர நடிகை இன்னும் பல அடையாளங்களை இவருக்குன்னு வந்து சொல்லிக்கிட்டே வந்து போலாம் குறிப்பா சொல்லனும்னா தமிழ் சினிமாவை புரட்டி போட்ட மிகப்பெரிய நடிகை நகைச்சுவை குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே வந்து கிடையாது.

 ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலை உலக வாழ்க்கை தொடங்கி சினிமாவுல எம்ஜிஆர் சிவாஜி என அன்றைய காலம் முதல் கிட்டத்தட்ட இன்றைய தலைமுறை வரை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் துறை உலகை ஆட்சி செய்து அதுக்கப்புறம் நம்மை விட்டு போனாலும் இன்னும் நம்ம மனசுல வந்து வாழ்ந்துட்டு இருக்க கூடிய ஆட்சி மனோரமா இடத்தை யாராலயும் வந்து பிடிக்க முடியாது அப்படிங்கிறத நிதர்சனமான உண்மை அப்படிங்கிறத யாராலும் வந்து மறுக்க முடியாது.  

சனி, 18 பிப்ரவரி, 2023

சிந்திக்க சிலவரிகள்


 

உடல்நோயை  விட மனநோய் கொடியது  உடல்நோயை மருந்துகளால்   குணப்படுத்தி விடலாம்,  ஆனால் மனநோயை மருந்துகளால் குணப்படுத்த முடியாது. ஆகையால் மனதையும்  ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் வாழ்வில் மகிச்சியாக இருங்கள்.

தன்னுடைய தவறுகளை உணர்ந்தவர்கள் திருந்தி விடுவார்கள், ஆனால் தன்னுடைய தவறுகளை நியாயப்படுத்துபவர்கள் வாழ்க்கையில் திருந்தவே மாட்டார்கள் .

சில தவறுகள் நாம் யார் என்று சொல்லிவிடும், சில தவறுகள் நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை சொல்லிவிடும்.

மனிதன் வியாபாரம் செய்ய பணத்தை கண்டுபிடித்தான் ஆனால் இன்று பணம் மனிதனை வைத்து வியாபாரம் செய்கிறது.

அன்பு என்பது நெல் மாதிரி போட்டால் தான் முளைக்கும், வம்பு என்பது புல் மாதிரி எதுவும் போடாமலே முளைக்கும்.

புயல் புல்லை வளைக்கத்தான் முடியும், ஒடிக்க முடியாது.

எதிலும் குறை காண்பவர்களுக்கு எதையும் ரசிக்க  தெரியாது.

 

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

தேன் தேன் தமிழ்த்தேன்

 


தேன் கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் தேன் கொண்டு வரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய இனிமை பொருந்திய விடை...

 ஐயா நீங்கள் கூறியதை நினைத் தேன் ,கொல்லிமலைக்கு நடந் தேன், பல இடங்களில் அலைந் தேன், ஓரிடத்தில் பார்த்தேன், உயரத்தில் பாறைத் தேன்,எப்படி எடுப்பதென்று மலைத் தேன், கொம் பொன்று ஒடித்தேன், ஒரு கொடியைப் பிடித் தேன்,ஏறிச்சென்று கலைத் தேன் பாத்திரத்தில் பிழிந் தேன்,வீட்டுக்கு வந் தேன்,கொண்டு வந்ததை வடித் தேன்,கண்டு நான் மகிழ்ந் தேன் ஆசையால் சிறிது குடித் தேன், மீண்டும்சுவைத்தேன்,  உள்ளம் களித்தேன்,உடல் களைத்தேன் உடனேபடுத்தேன் கண் அயர்ந்தேன்,அதனால் மறந்தேன், காலையில் கண்விழித்தேன் அப்படியே எழுந் தேன்,உங்களை நினைத் தேன், தேனை எடுத்தேன்,அங்கிருந்து விரைந் தேன் வேகமாக நடந் தேன், இவ்விடம் சேர்ந் தேன்,தங்கள் வீட்டை அடைந் தேன், உங்களிடம் கொடுத் தேன்,என் பணியை முடித் தேன் என்றார்.

 அதற்கு ...தேன் பெற்றவர் தேனினும், இனிமையாக உள்ளது உமது விடை.. இதனால் தான் நம் முன்னோர்கள் தமிழைத் தமிழ்த் தேன் என்று உரைத்தனரோ... எனக் கூறி மகிழ்ந் தேன் என்றார்.

 படித் தேன்.படித்ததில் சுவைத் தேன்,உடனே பகிர்ந் தேன்.

ஞாயிறு, 22 மே, 2022

வராக்.. வெள்ளி காகிதம்

 ஸ்வீட்கள் மேலேயுள்ள ஜரிகைதாள் மாட்டின் குடலில் இருந்து             தயாரிக்கப்படுகிறது என்பது தெரியுமா?

 

பொதுவாக ஸ்வீட் கடைகளில் வாங்குகிற ஸ்வீட்டுகள் மேல் ஒரு சில்வர் பேப்பர் ஒட்டிவைத்திருப்பார்கள். அந்த சில்வர் பேப்பர் அழகிற்காகவும் ஒட்டப் பட்டிருக்கும். அது ஒட்டிய பின்னர் அந்த ஸ்வீட்டில் இருந்து அதை எடுக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால பெரும் பாலானவர்கள் அந்த சில்வர் பேப்பரோடவே ஸ்வீட்டை சாப்பிடுவார்கள்.. ஸ்வீட் மேல ஒட்டியிருக்காங்கன்னா அது என்ன செய்திடப்போகுதுங்கிற நம்பிக்கை தான்.

இது சில்வர் ஃபாயில், சில்வர் ரேக் என சொல்லப்படுகின்றது. ஆனால் இதன் ஒரிஜினல் பெயர் வராக்..

இந்த வராக் எனப்படுவது எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது என்று சொன்னால் அதிர்ச்சியின் எல்லைக்கே போக நேரிடும். இருந்தாலும் எல்லாரும் தெரிந்து கொண்டு இனி அந்த வராக் பயன்படுத்தப்பட்ட இனிப்புகளை வாங்கி உண்பதை விட்டுவிடலாமே என்ற எண்ணத்தில் தான் அதைப் பற்றியான செய்தி இங்கே தரப்படுகின்றது..

வராக்’ எனப்படும் இந்த ஜரிகைதாள் மாட்டின் குடல் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது என்பது முதல் ஷாக்..

வராக் எப்படி தயாரிக்கிறார்கள்?

இறைச்சிக்காக மாட்டை கொன்றவுடன் அதன் குடல் பகுதியை மட்டும் தனியாக எடுத்து, அதிலுள்ள ரத்தம் மற்றும் மலம் போன்ற கழிவுகளை சுத்தம் செய்து, இந்த ‘வராக்’ தயாரிப்பாளர்களிடம் விற்பனை செய்வார்கள்.

மாடு இறந்த உடனேயே இந்த குடல் எடுக்கப்பட்டுவிடும். இல்லையென்றால் அது விறைத்து விடும். ஒரு மாட்டின் குடல் 540 இன்ச் நீளமும் 3 இன்ச் அகலமும் கொண்டது. இதை சுத்தம் செய்து நீளாக வெட்டினால் 540 இன்ச் 10இன்ச் என விரியும். ‘வராக்’ தயாரிப்பாளர்கள் 9க்கு 10இன்ச் என்ற வீதத்தில் 60 துண்டுகளாக வெட்டி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பார்கள். இது ஒரு நோட்புக் போல இருக்கும். 

அதன்பின்னர் மெலிசான வெள்ளி தகட்டை, வெட்டப்பட்டு அடுக்கி வைக்கப் பட்டுள்ள ஒவ்வொரு குடலுக்கு இடையில் வைத்து மொத்தத்தையும் ஒரு தோல் பையில் வைத்து இறுக்கிக் கட்டுவார்கள். இந்த தோல் மூட்டையை 1 அல்லது 2 நாள் வரை விடாது அடிப்பார்கள். இப்படி அடித்து, அடித்து அந்த வெள்ளி தகட்டை மெல்லிய தாள்களாக மாற்றுவார்கள்.

பிறகு அதை தோல் பையிலிருந்து எடுத்து, குடல்களை நீக்கி, வெள்ளி தாள்களை அடுக்கி வைப்பார்கள். இப்படி தொடர்ந்து அடிப்பதினால் அது மிக மெல்லிய வெள்ளி தாளாக மாறுகின்றது..

இப்படி தயாரிக்கப்பட்ட வெள்ளி சரிகை தாள்கள் மொத்தமாக ஸ்வீட் தயாரிப்பாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 160 வெள்ளி சரிகை தாள்கள் (10 கிராம் எடை) கொண்ட ஒரு ரோலின் விலை 200 ரூபாய்.இந்த வெள்ளி சரிகை தாள்களைதான் ஸ்வீட்டுகளின் மேல் அழகுக்காக பரப்பிவிடுகிறார்கள்.

 முட்டை கூட தொடாத சைவ பிரியர்கள் இந்த வெள்ளிதாள்கள் எதிலிருந்து செய்யப்படுகின்றது என்ற விவரம் தெரியாமலேயே இந்த ‘சரிகை தாள்’ கொண்ட இனிப்பை அந்த தாள்களை நீக்காமேலேயே சாப்பிடுகிறார்கள்.

தோல் பெட்டியில் வைத்து அடிக்கப்படும் வெள்ளி தகடுகள், மெல்லிய தாள்களாக மாறும் போதும், குடலில் உள்ள திசுக்கள் சூடாக உள்ள இனிப்புகள் மீது இந்த தாள்கள் ஒட்டப்படும்போடு இந்த இனிப்பில் அந்த திசுக்கள் கலந்துவிடுகின்றது. அதனால் இனிப்பில் மாட்டின் குடலில் உள்ள திசுக்கள் கலந்துவிடுகின்றது..சைவ இனிப்பு அசைவ இனிப்பாக மாறுகிறது.

இதில் என்ன கொடுமை என்றால் அந்த சில்வர் ரேக் சுற்றப்பட்ட ஸ்வீட்டை வாங்கிச் சாப்பிடும் போது நமக்கு தெரியாமலேயே, மாட்டு குடல்களில் உள்ள கிருமிகள் மற்றும் குடல் புழுக்களின் முட்டைகள் ஆகியவற்றை வயிற்றுக்குள் செல்ல நேரிடலாம். மாட்டுக்கறி உண்பவர்கள் கூட மாட்டின் குடலை உணவில் பயன்படுத்துவதில்லை. காரணம் அந்த குடல்களில் உள்ள திசுக்கள், கிருமிகள், குடல்புழுக்கள் ஆபத்தானவை என்பதால்.

ஸ்வீட் தானே என்று இந்த தாள் சுற்றப்பட்ட இனிப்புகள் உண்பதால் பல கொடிய நோய்கள் நம்மையறியாம லேயே நமக்கு ஏற்படுகின்றது.

இப்படி இந்த சில்வர் தாள்கள் எதிலிருந்து தயாரிக்கப் படுகின்றது என்பது இனிப்பு தயாரிப்பாளர்களுக்கு தெரிந்திருந்தும் தொடர்ந்து பயன் படுத்துவதின் நோக்கம் அந்த இனிப்புகள் இந்த காகிதத்தால் அலங்கரிக்கப் படுகின்றது, 

அதன் காரணமாக பார்ப்பவர்களுக்கு ஒரு கவர்ச்சியும், அந்த இனிப்பினை வாங்கவும் தூண்டுகின்றது என்பதினால் இதனை தொடர்ந்து பயன்படுத்துகின்றார்கள்.

ஒரு சில இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் இந்த விவரம் தெரிந்த பின்னர் அதனை வாங்கி தங்களது இனிப்பின் மேல் சுற்றுவதில்லை.. இவ்வளவு ஏன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த வெள்ளி தாளால் மூடப்பட்ட இனிப்புகளை பல காலமாக பரிமாறி வந்தனர்.

இந்த வெள்ளி தாள் எந்த வகையில் தயாரிக்கப்படுகின்றது என்ற செய்தி அறிந்ததும் இப்போது அந்த இனிப்புகள் வாங்குவதை நிறுத்திவிட்டார்கள்.

ஒரு சர்வே என்ன சொல்லுதுன்னா ஒரு வருஷத்திற்கு நம் நாட்டில் தயாரிக்கப்படும் இனிப்பின் மேல் சுற்றுவதற்கு தயாரிக்கப்படும் அந்த தாளுக்கு 275 டன் வெள்ளி தேவைப்படுகின்றது.

இந்த ப்ராசஸ் நடைபெற்று அதனை மெல்லிய வெள்ளித்தாளாக மாற்ற 5,16,000 மாடுகள் மற்றும் 17,200 கன்றுகளின் தோல்கள் தேவைப்படுகிறது.

இதைபற்றி பல செய்தித்தாள்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் அரசாங்கம் இதற்கு தடை ஏற்படுத்தவும் இல்லை. அரசாங்கமே தடை ஏற்படுத்தாமல் போனதால இன்னும் பல பிரபல இனிப்பு நிறுவனங்கள், இதனை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியான வேதனை..

இனி இனிப்புகள் வாங்கும்போது இந்த வெள்ளித்தாள் சுற்றப்பட்ட இனிப்புகளை வாங்குவதை கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.!  

Jain Meditation International Center, New York இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருப்பதை இங்கே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது..

நன்றி - Dr. நந்தகுமார்.

அன்றும் இன்றும்


 அன்று வீடு நிறைய குழந்தைகள் 

இன்று வீட்டுக்கொரு குழந்தை 

அன்று பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்

இன்று சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்

அன்று குறைந்த வருமானம் நிறைந்த நிம்மதி 

இன்று நிறைந்த வருமானம் குறைந்த நிம்மதி 

அன்று படித்தால் வேலை

இன்று படிப்பதே வேலை

அன்று வீடு நிறைய உறவுகள்

இன்று உறவுகள் அற்ற வீடுகள்.

அன்று  உணவே மருந்து

இன்று மருந்தே உணவு

அன்று முதுமையிலும் துள்ளல்

இன்று இளமையிலேயே அல்லல்

அன்று உதவிக்கு தொழில் நுட்பம்

இன்று தொழில் நுட்பமே உதவி

அன்று யோக வாழ்க்கை

இன்று எந்திர வாழ்க்கை 

அன்று தியாகம் நாட்டை காப்பாற்றியது

இன்று துரோகம் நாட்டை கூறுபோடுகிறது

அன்று படங்களில் பாடல் கருத்தானது. 

இன்று கருத்தே இல்லாத பாடலானது

அன்று  ஓடினோம் வயிற்றை நிறைக்க 

இன்று ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க

அன்று பெரியோர்கள் பாதையில்

இன்று இளைஞர்கள் போதையில் 

அன்று  ஒரே புரட்சி 

இன்று ஒரே வறட்சி

அன்று வளச்சிப்பாதையில் இளைஞர்கள்.

இன்று போதையின் பிடியில் இளைஞர்கள்.

அன்று ஊரே கூட கோலாகல விழா

இன்று ஊருக்கே போக முடியாத மூடுவிழா 

அன்று கைவீசி நடந்தோம்

இன்று கைப்பேசியுடன் நடக்கிறோம்

அன்று ஜனநாயகம்

இன்று பணநாயகம்

அன்று விளைச்சல் நிலம்

இன்று விலை போன நிலம்

அன்று தொட முடியாத உச்சத்தில் காதல்

இன்று தொட்டு முடியும் எச்சம் காதல்

அன்று கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்

இன்று கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.

அன்று நிறைந்தது மகிழ்ச்சி

இன்று மகிழ்வை தேடும் நிகழ்ச்சி

அன்று வாழ்ந்தது  வாழ்க்கை

இன்று ஏதோ வாழ்கிறோம் வாழ்க்கை..

இதுவும் கடந்துபோகும்.

வியாழன், 19 மே, 2022

சொல்வது சுலபம் அதை செய்வது கடினம்



 முன்னொரு காலத்தில் ஒரு ஓவிய ஆசிரியர்  இருந்தார், அவரிடம் ஒரு சிஷ்யன்  தனது ஓவிய படிப்பைமுடித்து விட்டு தனியாக ஓவியம் வரைய முற்பட்டார்.அவர் 3 நாட்கள் எடுத்து அழகான இயற்கைக்காட்சியை வரைந்தார். தனது திறமை மற்றும் ஓவியத் திறன்களைப் பற்றி மக்களின் கருத்தை விரும்பினார்.

ஆகையால்  தனது படைப்பை ஒரு பரபரப்பான தெரு-சதுக்கத்தில்  வைத்தார். மற்றும் ஒரு பலகையில்  கீழே இதை எழுதினார்-"நான் இந்த ஓவியத்தை  வரைந்திருக்கிறேன். நான் இந்த தொழிலுக்கு புதியவன் என்பதால், என் ஓவியத்தில்  சில தவறுகளை நான் செய்திருக்கலாம். நீங்கள் அப்படி ஒரு தவறை எங்கு பார்த்தாலும் அந்த இடத்தில ஒரு X மார்க்  போடுங்கள்." என்று எழுதி வைத்து விட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார் .

அவர் தனது ஓவியத்தை சேகரிக்க மாலையில் திரும்பி வந்து, தனது ஓவியத்தை பார்த்த போது மிகவும் ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருந்தது  தன் முழு ஓவியமும்  எக்ஸ் (X) நிரப்பப்பட்டிருப்பதைக் கண்டு அவர் முற்றிலும் நொறுங்கிப் போனார், மேலும் சிலர் ஓவியம் குறித்து தங்கள் கருத்துக்களை கூட எழுதியிருந்தனர்.மனமுடைந்து முற்றிலுமாக உடைந்துபோன அவர் தனது ஓவிய ஆசிரியரிடம்  ஓடிச்சென்று தனது ஓவியத்தை பற்றி கூறி கண்ணீர் விட்டார்.

அந்த இளம் கலைஞர் கனத்த இதயத்தை வருடிக்கொண்டிருந்தார், ஓவிய ஆசிரியர் அவர் சொல்வதைக் கேட்டார், "நான் பயனற்றவன், இதைத்தான் நான் ஓவியம் வரைவதற்குக் கற்றுக்கொண்டேன் என்றால், நான் ஒரு ஓவியர் ஆகத் தகுதியற்றவன். மக்கள் என்னை முற்றிலுமாக நிராகரித்து விட்டார்கள். நான் இறப்பது போல் உணர்கிறேன்" என்று முறையிட்டுக்கொண்டிருந்தார் .

ஓவிய ஆசிரியர் புன்னகையுடன், "மகனே, நீ ஒரு சிறந்த ஓவிய கலைஞன் என்பதையும், குறைபாடற்ற ஓவியங்களைக் கற்றுக்கொண்டாய் என்பதையும் நான் நிரூபிக்கிறேன் . நான் சொல்வதை கேள்வி கேட்காமல் செய்யுங்கள். அது உன்னை ஒரு சிறந்த ஓவிய கலைஞனாக எடுத்துக்காட்டும் ." என்றார் .

இளம் ஓவியர் தயக்கத்துடன் அதை  ஒப்புக்கொண்டார், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதிகாலையில் அவர் தனது முந்தைய ஓவியத்தின் பிரதியைத் தனது ஓவிய ஆசிரியரிடம் வழங்கினார். குருதேவர் அதை அழகாக எடுத்துக் கொண்டு புன்னகைத்தார்."என்னுடன் வா" என்றார் ஓவிய ஆசிரியர் .

அவர்கள் அதிகாலையில் அதே தெரு-சதுக்கத்தை அடைந்து, அதே ஓவியத்தை அதே இடத்தில் சரியாக காட்சிப்படுத்தினர். இப்போது ஓவிய ஆசிரியர்  மற்றொரு பலகையை வெளியே எடுத்தார், அதில் "கனவான்களே, நான் இந்த ஓவியத்தை  வரைந்துள்ளேன். நான் இந்த தொழிலுக்கு புதியவன் என்பதால், என் ஓவியத்தில்  சில தவறுகளை நான் செய்திருக்கலாம். ஆகையால் நான் வண்ணங்கள் மற்றும் தூரிகைகள் கொண்ட ஒரு பெட்டியை கீழே வைத்துள்ளேன். தயவுசெய்து ஒரு உதவி செய்யுங்கள். நீங்கள் இந்த ஓவியத்தில் ஒரு தவறைக் கண்டால், தயவுசெய்து தூரிகையை எடுத்து இந்த ஓவியத்தில் எங்கு குறை கண்டீர்களோ அங்கே  அதை  தூரிகையால் சரி செய்யவும்." இப்படி சரி செய்தால் இந்த ஓவியம் முழுமை அடையும். என்று எழுதி வைத்தார் .பின்பு குருவும் சீடரும் வீட்டிற்குத் திரும்பினர்.

அவர்கள் இருவரும் அன்று  மாலையில் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தனர் . உண்மையில் இதுவரை ஒரு திருத்தம் கூட செய்யப்படவில்லை என்பதைக் கண்டு இளம் ஓவியர் ஆச்சரியப்பட்டார். அடுத்த நாள் மீண்டும் அவர்கள் பார்வையிட்டனர், ஓவியம் தொடப்படாமல் இருப்பதைக் கண்டார்கள். எந்த திருத்தமும் வராததால் அந்த ஓவியம் ஒரு மாதமாக அங்கேயே வைக்கப்பட்டிருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.

கதையின் கருத்து:-

விமர்சிப்பது என்பது எளிது, ஆனால் அதை சரிப்படுத்துவது என்பது கடினம்!

எனவே,வேறொருவரின் விமர்சனத்தால் உங்களை நீங்களே தாழ்த்தி மதிப்பிடவோ அல்லது மனச்சோர்வை அடையவோ  வேண்டாம்.உங்களை நீங்களே தீர்மானிக்கவும்! நீங்களே  உங்களின்  சிறந்த நீதிபதி!!அப்படியானால்  நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பீர்கள்!!!

செவ்வாய், 17 மே, 2022

The First Finest Tamil Anglican Church

 

    The First Finest Tamil Anglican Church


 St.Paul’s Church had a great history behind it. That after the “ Fourth Anglo-Mysore war” in 1799, Mysorean territory was annexed by the British. Seringapatam was the First capital of Mysore. British formed a military cantonment in Seringapatam in 1803.

                

                                                St.Paul’s Church had a great history behind it. That after the “ Fourth Anglo-Mysore war” in 1799, Mysorean territory was annexed by the British. Seringapatam was the First capital of Mysore. British formed a military cantonment in Seringapatam in 1803. Soon later in 1806, they moved the military cantonment to Bangalore because of the spread of Malaria in Seringapatam. The cantonment covered 13 square miles, extending from the Residency on the west to Binnamangala on the east and from the Tanneries in the north to Agram in the south. By area, it was the largest British military cantonment in South India.  The British garrison stationed in the cantonment included three artillery batteries and regiments of the cavalry,  infantry, sappers, miners, mounted infantry, supply, and transport corps, and the Bangalore Rifle Volunteers. The Bangalore Cantonment was directly under the administration of the British. The British found Bangalore to be a pleasant and appropriate place to station their garrison. The installation of the Bangalore Cantonment attracted a large number of migrant workers from Tamil Nadu and other neighboring states.


 In 1831, the capital of the Kingdom of Mysore was moved from Mysore city to Bangalore. It is said that the heart of the Bangalore Cantonment was the Parade Ground. The Civil and Military Station (CMS) grew around the Parade Ground. Bangalore was part of the Madras Presidency, and in 1864, the city was connected to Madras by rail. Still called the Bangalore Cantonment Railway Station, it is one of many railway stations servicing the city of Bangalore. Around 1883, Richmond Town, Benson Town, Ulsoor, Shivaji Nagar, Frazer Town, Miller’s Tank, Sankey Tank, and Cleveland Town were added to the cantonment.       

          

                Shivajinagar was pretty much a wasteland. The first settlers in the area set up a small village with a mud wall around it. These people are called ‘Black Pally’. The first settlers in this area were farmers from Gingee, who set up a village and cultivated white rice. It is believed that the name Black pally for the area came from the bili akki (white rice) that they grew in their fields. Basically, groundlings like butlers, cobblers, cooks, drivers, and dobbies lived there. These people work for Britishers. In 1808, the Britishers congregated at St.Mark’s Church exclusively for them. The foundation of this cathedral was laid down in the year 1808 and the construction work was completed in 1812. However, it was only in 1816 that St. Mark's Church got consecrated by the Bishop of Calcutta. It was built in the colonial style of architecture, and it stands adorned with a semicircular chancel, having a huge, magnificent dome.


The  St. Mark's Church was built on the South Parade grounds. It is the Britishers noted the groundlings were chit-chatting outside the Church, while these Britishers have their service in St.Mark’s. Only then does the problem of rights arise. Britishers thought of constructing a separate place of worship for them. Then the plan for St.Paul’s Church was sorted out and sanctified.  The date of Consecration – 31st March 1840 A.D by the Lord Bishop of Madras Rt.Rev.George Trevor Spencer. This consecration was necessitated especially for the Tamil-speaking congregation who lived in and around the area. Most of the bosses, probably the Europeans, used to worship in St.Mark’s Church. It was then the Chaplain of  St.Mark’s Church and the congregation of that church decided to build a small for the Tamil Speaking people. The work started soon after 1838 and on the 31st  of March 1840. The church was named after the Patron Saint St.Paul and was joyfully consecrated by the Lord Bishop of Madras. St.Paul’s Church is the finest Tamil congregation till now in Bangalore.


The congregation proliferated that the church had to undergo two extensions in the years that followed. The first extension was in 1936 when the pews were extended and the vestry was constructed. The second extension took place in the year 1947, wherein the Altar and the Chancel were extended and added to the extension.


  • The First extension was consecrated by the Lord Bishop of Madras E.H.M. Waller.

  • The Second extension was consecrated by Rt.Rev.H.Pakenham-Walsh.


                 The Church celebrated its centenary year in a very grand and solemn manner in the year 1940. The Church entered its 150th year on the 31st of March in 1990. To mark this occasion several social and Charitable programs were conducted. The Church still continues to grow in leaps and bounds. The organizers are planning for a third extension to accommodate the growing crowd. On the 1st of May 2014, the Church stepped into its 175th year. 

            

                The Church has majestic features, especially the choir and the musical accompaniment. It seems, there is no age limit to be in part of the choir. They have attached nearly four LG LCD TVs for the comfort of the people who seats a little distant from the Altar. There is a fixed camera through which the whole service is broadcasted. Also, a proper man is allotted to remote the camera in his controller room. The Pulpit is made of wood and steel which gives us a royal look. The Church has its own decorum and manners by the touch of Britishers.



                Near the Altar, on the right side there kept the portrait of Jesus Christ suffering on the Cross and a metal Cross below it. I am sure, no church will fail to have this. People coming from various backgrounds will always be reminded of Christ's sufferings upon seeing this portrait and naturally, there comes humbleness and a broken heart within them. And the main part of British architecture is the glass paintings placed above every window. There were nearly ten glass paintings I noticed. It was like every single glass painting is trying to convey something to me. I was reminded of several Bible verses when I tend to see those paintings.


  • Jesus carrying the Cross to Calvary – John 19:17. The sufferings and pains that he underwent pierced my heart whenever I looked at this image. Also, I get a repeated question in my mind, What have I done to this great man (of course, He lived as a human being in this world like us)other than saying Jesus I love you??

  • Saul falls off his horse when exposed to sudden bright light which came from Heaven – Acts 9:3,4. After this incident, Saul turned into Paul, who became a great preacher and writer. Thereafter he lived his entire life as an apostle, who taught the Gospel of Christ to the first-century people.

  • Jesus knocking at the door – Revelation  3:20. It is that one who opens the door for Him shall dine with Him. That was the promise given by the Lord.

  • The Calvary Cross. It is symbolized in red color. It reminds me that Jesus shed his last drop of blood for us. One cannot show any pure love beyond Him!

  • Cross with Heavenly crown in its midst – I am reminded of whoever suffers for Him in this physical world, shall be rewarded in Heaven. Also, it provokes my mind to think about Judgement Day, where all people are gathered together to be judged for their deeds by Heavenly Father.

  • The Holy Bible which was in an open state – Looked as if the painting was asking me the question, Did you read the Bible today? I got stuck for a minute and then I said to myself - Yes, I did! 

  • This painting moved me really. It is like many hands are stretching out for help and One hand from Heaven is about to touch those hands. It is said in the Bible that He is our Helper, Comforter, Rescuer, Protector, and All in All. 

  • The most captured painting to me is Jesus sitting with children – Matthew 19:14. He loves little kids and He remarked that one cannot enter Heaven unless he got converted and becomes like children ( Matthew 18:3)

  • Finally, I saw the painting of Jesus holding a sheep. This painting gives me two references in the Bible. One is ‘The Lost Sheep’ proposed in Luke's 15th chapter. Jesus told many parables to the crowd. In ‘The Lost Sheep’ tells us of the importance of one soul. Through this parable, He says that Heaven will be more rejoicing over one sinner who repents than over ninety-nine righteous persons who do not need to repent. The other reference is “Jesus as our great Shepherd”. The Psalmist King David sings in his famous Psalm 23, ‘The Lord is the Shepherd that I shall not be in want. 

                       The Church Secretary Mr.JeyaKumar witnessed that for 8 years, Bowring Hospital management was about to take over the land of the Church. But it is he who rescued the Church by showing the ‘Cross’ which was continuously marked on the compound walls of the Church. And I found there is no space given between the Credence table and the Reredos. It is the Anglican belief that the Priest does everything facing the East. Also, I get to know that the tradition they follow in St.Paul’s Church draws more people towards it. The church follows a traditional systematic service that attracts the nearby people. The proud thing is that St.Paul’s Church is the First Tamil Anglican church in Bangalore.


சனி, 14 மே, 2022

அன்னையர் தினம்

 ஒரு சர்வதேச  ஆடம்பரமான பள்ளியின் தோட்டங்களில் உள்ள தாவரங்களுக்கு அவர் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார், வெப்பமும் தூசியும் அவரைப் பாதித்ததாகத் தெரியவில்லை.தலையில் துண்டுடன், நெற்றியில் வேர்வையுடன் வேலையில் கவனமாக இருந்தார்.

                                                      



வீராசாமி,  முதல்வர் மேடம் உங்களைப் பார்க்க விரும்புகிறார்,உடனே போய் பாருங்க என்று பியூன் சொல்ல,பியூனின் கடைசி இரண்டு வார்த்தைகள் அவற்றுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து, அதை ஒரு அவசரம் போல் ஒலிக்கச் செய்ய முயன்றன.அவர் விரைவாக எழுந்து, கைகளைக் கழுவி துடைத்துக்கொண்டு, அதிபரின் அறையை நோக்கிச்சென்றார்.

தோட்டத்திலிருந்து அலுவலகத்திற்கு நடந்து செல்வது ஒருபோதும் முடிவடையவில்லை என்று தோன்றியது, அவரது இதயம் கிட்டத்தட்ட அவரது மார்பிலிருந்து குதித்துக் கொண்டிருந்தது.அவர் அனைத்து நிகழ்வுகளையும்  மற்றும் அன்றய தினம் எதாவது தவறு நடந்ததா என்று முயற்சி செய்து கொண்டே போகிறார். முதல்வர்  அவசரமாக அவரை பார்க்க வேண்டும் என்று ஏன்? என்ன தவறு நடந்தது என்று கண்டுபிடித்து அவர் என்ன தண்டனை கொடுப்பார் என்று சிந்தனை செய்துகொண்டே செல்கிறார் .அவர்  ஒரு நேர்மையான தொழிலாளி மற்றும் அவரது கடமைகளில் இருந்து ஒருபோதும் விலகவில்லை ஆனாலும்  அவருக்கு இந்த தடுமாட்டம் .

                                                       

கதவை டக் டக் என்று தட்டி "மேடம், நீங்கள் என்னை அழைத்தீர்களா? என்று மிகவும் பணிவோடு கேட்க, உள்ளிருந்து ஒருஅதிகாரபூர்வமான குரல் அவரை "உள்ளே வா" என்றது மேலும் பதட்டமடையச் செய்தது. சால்ட் அண்டு பெப்பர்  முடி, ஒரு பிரஞ்சு முடிச்சில் நேர்த்தியாக கட்டப்பட்டு, ஒரு வடிவமைப்பாளர் புடவை-நிதானமான மற்றும் மிகவும் உன்னதமான, கண்ணாடிகள் அவரது மூக்கின் பாலத்தில் மேல் ஓய்வெடுக்கின்றன. அவரின் மேஜையில் வைக்க  பட்டிருந்த ஒரு காகிதத்தை சுட்டிக் காட்டினார் .

"இதைப் படியுங்கள்" என்றார் முதல்வர் மேடம் 

உடனே வீராசாமி மேடம் நான் படிப்பறிவில்லாதவன்.எனக்கு English படிக்கத் தெரியாது,மேடம் நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் என் மகளை இந்தப் பள்ளியில் இலவசமாகப் படிக்க அனுமதித்ததற்காக நான் என்றென்றும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். என் குழந்தைக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையும் என்று நான் ஒருபோதும் கனவு கண்டிருக்க முடியாது. என்று அவன் ஏறக்குறைய நடுங்கி உடைந்து அழுகிற நிலைமைக்கே போனார் 

"பொறுங்கள் பொறுங்கள், நீங்கள் நிறைய நினைக்கிறீர்கள். நாங்கள் உங்கள் மகளை பள்ளியில்  அனுமதித்தோம், ஏனென்றால் அவள் மிகவும் பிரகாசமாக இருக்கிறாள், நீங்கள் எங்கள் நேர்மையான தொழிலாளியாக இருக்கிறீர்கள் .. நான் ஒரு ஆசிரியரை உள்ளே அழைக்கிறேன், அவர்  அதை படித்து அதை உங்களுக்கு மொழிபெயர்ப்பார், இது உங்கள் மகளால் எழுதப்பட்டது, இதை நீங்கள் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."விரைவில் ஆசிரியர் அழைக்கப்பட்டார், அவர் அதை படிக்கத் தொடங்கினார், ஒவ்வொரு வரியையும் தமிழில்  மொழிபெயர்த்தார்.

"இன்று அன்னையர் தினத்தைப் பற்றி எழுதுமாறு கேட்கப்பட்டிருக்கிறது,

நான் தமிழகத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவள், மருத்துவமும் கல்வியும் இன்னும் தொலைதூரக் கனவாகத் தோன்றும் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவள். பல பெண்கள் பிரசவிக்கும் போது அவ்வப்போது மருத்துவ வசதி இல்லாமல் இறந்திருக்கிறார்கள் . என் அம்மாவும் அவர்களில் ஒருத்திதான், அவளால் என்னைத் தன் கைகளில் கூடப் பிடிக்க முடியவில்லை. என் தந்தைதான் என்னை முதன்முதலில் பிடித்தார்.எல்லோரும் என் மீது சோகமாகவும் வருத்தமாகவும் இருந்தார்கள். ஏனென்றால் முதலில் நான் ஒரு பெண் மற்றும் நான் என் சொந்த அம்மாவை பிறக்கும் போதே சாகடித்து விட்டேன் என நம்பினார்கள். என் தந்தையை  உடனடியாக மறுமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார், ஆனால் அவர் மறுத்துவிட்டார்.என் தாத்தா பாட்டி அனைத்து தக்கரீதியான, நியாயமற்ற மற்றும் உணர்ச்சி ரீதியான காரணங்களைக் கொடுப்பதன் மூலம் அவரை கட்டாயப்படுத்தினர், ஆனால் அவர் அசையவில்லை.

எனது தாத்தா மற்றும் பாட்டி ஒரு பேரனை விரும்பினார்கள், மறுமணம் செய்துகொள்ள  அவர்கள் அவரை அச்சுறுத்தினர், இல்லையெனில் அவர் நிராகரிக்கப்படுவார் என எச்சரித்தார்கள் ஆனால் இதற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை .

அவர் இதைப்பற்றி எதுவுமே யோசிக்கவில்லை. அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டார், அவரது 20 ஏக்கர் நிலம் .ஒரு நல்ல வாழ்க்கை, வசதியான வீடு, கால்நடைகள் மற்றும் ஒரு கிராமத்தில் ஒரு நல்ல வாழ்க்கை முறைக்கு கணக்கிடப்படும் அனைத்தும்.அவர் முற்றிலும் எதுவும் இல்லாமல் இந்த பெரிய நகரத்திற்கு வந்தார் அவரது கைகளில் என்னைத் தவிர வாழ்க்கை கடினமாக இருந்தது,அவர் இரவும் பகலும் கடினமாக உழைத்தார்,மென்மையான அன்புடனும் மிகுந்த கவனத்துடனும் என்னை வளர்த்தார்.

நான் சாப்பிடும் தட்டில் ஒரே ஒரு துண்டு மட்டுமே எஞ்சியிருக்கும்போது, நான் சாப்பிட விரும்பும் பொருட்களின் மீது அவருக்கு ஏன் திடீரென்று வெறுப்பு ஏற்பட்டது என்பது இப்போது எனக்குப் புரிகிறது. அவர் அதை சாப்பிடுவதை வெறுக்கிறார் என்று அவர் சொல்வார், அவர் அதை விரும்பவில்லை என்று கருதி நான் அதை சாப்பிட்டு முடிப்பேன். ஆனால் நான் வயதாகும்போது, தியாகம் என்பது என்ன என்பதற்கான காரணத்தையும், தியாகத்தையும் உணர்ந்தேன்.

அவர் தனது திறனுக்கு அப்பாற்பட்ட சிறந்த வசதிகளை எனக்கு வழங்கினார். 
இந்த பள்ளி அவருக்கு ஒரு தங்குமிடம், மரியாதை மற்றும் மிகப்பெரிய பரிசை வழங்கியது.அவரது மகளுக்கு ஒரு சேர்க்கை,அன்பும் அக்கறையும் ஒரு தாயை தியாகம்  என்றால், பின்னர் என் தந்தைக்கு  அந்த தியாகம்  பொருந்துகிறது. இரக்கம் ஒரு தாயை வரையறுத்தால், என் தந்தையும் அந்த பிரிவில் நன்கு பொருந்துகிறார்,தியாகம் ஒரு தாயை வரையறுக்கிறது என்றால், என் தந்தை அந்த வகையை ஆதிக்கம் செலுத்துகிறார்.எனவே  ஒரு தாய் அன்பு, பராமரிப்பு தியாகம் மற்றும் இரக்கம் ஆகியவற்றால் செய்யப்பட்டால்.என் தந்தையும்  எனது தாய்க்கு இணையாகவும் பூமியில் சிறந்த தாயாகவும் என்னை பராமரித்தார், இந்த அன்னையர் தினத்தில், பூமியில் சிறந்த பெற்றோராகவும் சிறந்த தாயாகவும் என் தந்தையை நான் வாழ்த்த விரும்புகிறேன். நான் அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன்,அவரை தெய்வமாக  வணங்குகிறேன் இந்த பள்ளியில் பணிபுரியும் கடின உழைப்பாளி தோட்டக்காரர் என் தந்தை என்று பெருமையுடன் கூறுகிறேன்.என் ஆசிரியர் இதைப் படித்த பிறகு நான் இந்த பரிட்சையில்  தோல்வியடையக்கூடும் என்று எனக்குத் தெரியும் - ஆனால் இது என் தந்தையின் தன்னலமற்ற அன்பிற்கு ஒருவர் செலுத்தும் மிகக் குறைந்த விலையாக இருக்கும்.எனக்கு தந்தையாகவும் தாயாகவும் இருந்து அன்பு செலுத்திய என் தந்தைக்கு எனது அன்பான அன்னையர் தின  கோடான கோடி வாழ்த்துக்கள்.

அந்த அறையில் காதைச் செவிடாக்கும் மெளனம் நிலவியது.வீரசாமியின் மென்மையான விம்மல் மட்டுமே ஒருவரால் கேட்க முடிந்தது. 

கடுமையான வெயிலால் தன் துணிகளை வியர்வையால் நனைக்க முடியவில்லை. ஆனால் மகளின் மென்மையான வார்த்தைகள் அவன் மார்பைக் கண்ணீரால் நனைத்திருந்தன. அவர் கைகளைக் கூப்பியபடி நின்று கொண்டிருந்தார்..அவர் ஆசிரியரின் கைகளில் இருந்து காகிதத்தை எடுத்தார்.அதை தன் இதயத்திற்கு நெருக்கமாகப் பிடித்துக் கொண்டு விம்மி அழுதார் .

முதல்வர் எழுந்தார்.. அவருக்கு ஒரு நாற்காலி, தண்ணீர் டம்ளர் கொடுத்து விட்டு ஏதோ சொன்னார். ஆனால், விசித்திரமாக அவருடைய குரலின் மிருதுவான தன்மை ஒரு ஆச்சரியமான அரவணைப்பாலும் இனிமையாலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

வீராசாமி உங்கள் மகளுக்கு இந்த கட்டுரைக்கு 10/10 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இப்பள்ளியின் வரலாற்றில் அன்னையர் தினத்தைப் பற்றி எழுதப்பட்ட மிகச் சிறந்த கட்டுரை இதுவாகும். நாளை அன்னையர் தின விழா நிகழ்வை நாங்கள் நடத்துகிறோம், மேலும் முழு பள்ளி நிர்வாகமும் இந்த நிகழ்வுக்கு தலைமை விருந்தினராக உங்களை அழைக்க முடிவு செய்துள்ளது... இது ஒரு மனிதன் தனது குழந்தைகளை வளர்க்க செய்யக்கூடிய அனைத்து அன்பையும் தியாகத்தையும் கெளரவப்படுத்துவதாகும்... நீங்கள் சரியான பெற்றோராக  இருக்க ஒரு பெண் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காட்ட மிக முக்கியமாக இதை  வலுப்படுத்த / பாராட்ட / உங்கள் மகளின்  வலுவான நம்பிக்கை ஒப்புக்கொள்ள உள்ளது, அவளை பெருமை உணர செய்ய உங்கள் மகளால் கூறப்பட்டபடி பூமியில் சிறந்த பெற்றோர் எங்களிடம் இருக்கிறார்கள் என்று முழு பள்ளியையும் பெருமைப்படச் செய்வதற்காக. நீங்கள் ஒரு உண்மையான தோட்டக்காரர் நீங்கள் தோட்டங்களை கவனித்துக் கொள்வது மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையின் மிக விலைமதிப்பற்ற பூவை இவ்வளவு அழகான வழியில் வளர்க்கிறீர்கள்.

"அப்படியானால் வீராசாமி இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் எங்கள் தலைமை விருந்தினராக இருப்பீர்களா?" என்று கேட்டபடி முதல்வர் அவரின் பதிலுக்காக காத்திருந்தார் .

வெள்ளி, 13 மே, 2022

Google என்றால் என்ன?



 1. கூகிள் ஒரு நொடியில் சுமார் 9,40,000 ரூபாய் சம்பாதிக்கிறது.

2. அதன் நிறுவனர் பெயர் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின்.

3. Google க்கு 40 நாடுகளில் 70 க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன.  இது ஒரு பெரிய சாதனையாகும்.

4. கூகுள் நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளில் 827 நிறுவனங்களை வாங்கியுள்ளது.  கூகிள் எவ்வளவு பெரிய நிறுவனம் என்பதை இப்போது நீங்கள் யூகிக்க முடியும்.

5. தற்போது, 4200000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூகுளில் பணிபுரிகின்றனர், ஆனால் இப்போது வரை கூகுளின் பல ஊழியர்கள் பில்லியனர்களாக மாறியுள்ளனர்.

6. யாரும் Google இன் சரியான வருமானத்தை சொல்ல முடியாது என்றாலும், ஆனால் Google இன் ஆண்டு வருமானம் சுமார் $ 55,00,00,00,00,000,000,000,000,000,000,000,000 டாலர்கள்.

7. Android இயக்க முறைமை Google இன் பரிசு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  ஆனால் ஒவ்வொரு 5 ஸ்மார்ட்போன்களிலும் 4 ஆனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே இயங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

8. கூகிள் தனது "தலைமை அலுவலகத்தில்" சுமார் 20,000 ஆடுகளை புல் வெட்டுவதற்காக வைத்திருக்கிறது.  ஆமாம், நீங்கள் அதை சரியாகப் படிக்கிறீர்கள், உண்மையில் கூகிள் அதன் அலுவலகத்தின் புல்வெளியில் ஒரு வெட்டுபவரைப் பயன்படுத்துவதில்லை, ஏனெனில் அதிலிருந்து வெளியேறும் புகை மற்றும் ஒலி அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.

9. ஒவ்வொரு வாரமும் 220,000 க்கும் மேற்பட்டவர்கள் கூகுளில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கின்றனர்.

10. கூகுளின் வருவாயில் 95% க்கும் அதிகமானவை அது வெளியிடும் விளம்பரங்களிலிருந்து வருகின்றன.

11. என்னை நம்புங்கள், கண் இமைக்கும் நேரத்தில் கூகிள் ரூ.550 லட்சம் சம்பாதித்திருக்கும்.

 12. "கூகிள்" என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என்று நீங்கள் அடிக்கடி யோசித்திருப்பீர்கள், உண்மையில் 100 பூஜ்ஜியங்களை 1 க்கு பின்னால் வைப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட எண் "கூகோல்" என்றும் "கூகிள்" இந்த வார்த்தையிலிருந்து உருவாகிறது என்றும் நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.

13. இப்போது நீங்கள் கூகிள் ஏன் "கூகோல்" என்று பெயரிடப்படவில்லை, அது ஏன் "கூகிள்" என்று பெயரிடப்பட்டது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்?  உண்மையில் "Google" என்ற பெயர் ஒரு எழுத்துப்பிழை.  "கூகோல்" என்பதற்கு பதிலாக "கூகிள்" தட்டச்சு செய்யும் போது தட்டச்சு செய்யப்பட்டது, இதன் விளைவாக உங்களுக்கு முன்னால் உள்ளது.

14. கூகிள் 2006 ஆம் ஆண்டில் "யூ டியூப்" ஐ வாங்கியது, அந்த நேரத்தில் பலர் இந்த ஒப்பந்தத்தை கூகுளின் ஒரு பெரிய தவறு என்று கருதினர், இன்று யூடியூப் ஒவ்வொரு மாதமும் உலகம் முழுவதும் சுமார் 6 பில்லியன் மணி நேரம் பார்க்கப்படுகிறது.

15. ஒவ்வொரு வினாடிக்கும் 60,000 க்கும் மேற்பட்ட தேடல்கள் Google இல் செய்யப்படுகின்றன.

16. 2010 முதல், கூகிள் வாரத்திற்கு குறைந்தது ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளது.

17. கூகிள் தனது ஸ்ட்ரீட் வியூ வரைபடத்திற்காக 80 லட்சத்து 46 ஆயிரம் கி.மீ சாலைக்கு சமமான புகைப்படங்களை எடுத்துள்ளது.
 18. கூகிளின் முழு தேடுபொறியும் 100 மில்லியன் ஜிகாபைட் ஆகும்.  அவ்வளவு டேட்டாவை உங்களுடன் சேமிக்க, ஒரு டெராபைட்டின் ஒரு லட்சம் டிரைவ்கள் தேவைப்படும்.

19. கூகிள் அதன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு ஏபிசிடி கப்கேக், டோனட், எக்ளேர், ஃப்ரோயோ, ஜிஞ்சர்பிரெட், ஹனிகாம்ப், ஐஸ் கிரீம் சாண்ட்விச், ஜெல்லி பீன், கிட்காட், லாலிபாப் மார்ஷ்மெல்லோ ஆகியவற்றை விட என் & அடுத்த ஓ ஆகியவற்றை விட பெயரிட்டுள்ளது

20) யாகூ நிறுவனம் கூகிள் நிறுவனத்தை ஒரு மில்லியன் டாலர்களுக்கு வாங்க விரும்பியது, ஆனால் அது நடக்கவில்லை.

21. கூகிள் தொடங்கப்பட்டபோது, கூகிள் நிறுவனர் HTML குறியீட்டைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை, அதனால்தான் அவர் கூகிளின் முகப்புப்பக்கத்தை மிகவும் எளிமையாக வைத்திருந்தார், இன்னும் அது முற்றிலும் எளிமையானது.

22. 2005 ஆம் ஆண்டில், கூகிள் வரைபடம் மற்றும் கூகிள் எர்த் போன்ற புதிய பயன்பாடுகளை கூகிள் அறிமுகப்படுத்தியது.  இது போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது, இது முழு உலகத்தையும் ஒரு கணத்தில் அளவிட முடியும்.    அது இப்போது சந்திரன் வரை அதன் அணுகல் உள்ளது.

23. "தீயவர்களாக இருக்காதீர்கள்" என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற கோஷமாகும்.

24. Google இன் முகப்புப்பக்கத்தில் 88 மொழிகளைப் பயன்படுத்தலாம்!

ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை பயணம்

ஆச்சி மனோரமாவின் உண்மையான இயற்பெயர் கோபி சாந்தா, 1943 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மன்னார்குடி என்கின்ற இடத...