About

                                            




        இணைய தள நேயர்களுக்கு    

        வணக்கம்,  

என் பெயர் இராஐமணி அந்தோணி எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வாகைக்குளம் என்ற சிற்றூர் . எனது பள்ளிப்படிப்பு எனது ஊரிலும் ராமநாதபுரம் மாவட்டம் சாத்தூரிலும் படித்து வந்தேன் . நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவன் .எனது பள்ளிப்படிப்பு அடுத்து மதுரை சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களில் கூலி தொழிலாளியாக இருந்து வந்தேன் .பின் 1985ல் ஏர் இந்தியா பெங்களூரில் நிரந்தர ஊழியனாக வேளையில் அமர்ந்தேன்.எனக்கு திருமணம் முடிந்து 3 பிள்ளைகள் உள்ளனர் நான் எனது கம்பெனியில் இருந்து .2017ஆம் வருடம் ஓய்வு பெற்றேன். இப்பொழுது எனது வயது 61 ஆகின்றது .எனது வாழக்கையிலும் அலுவலகத்திலும் நான் கற்றுக்கொண்ட அனுபவங்களும் மற்றும் வெளிஉலகத்தில் எனது அனுபவத்தில் அறிந்து கொண்ட அனுபவங்களையும் உங்களிடத்தில் பகிர்ந்துகொள்ள நான் ஆசைப்படுகின்றேன் .எனது அனுபவங்கள் ,மற்றும் தொழில் ரீதியான அனுபவங்கள் வியாபார ரீதியான அனுபவங்கள் அனைத்தும் வரும்காலங்களில் உங்களிடத்தில் பகிர்ந்துகொள்ள கடமைப்பட்டுள்ளேன் .எனது  அனுபவங்களையும் அறிவுரைகளையும் படித்து வாசகர்கள்   பயன் பெறுவார்கள் என்று  நம்புகிறேன் .

 

                                            நன்றி! வணக்கம்!!

                                          


கருத்துகள் இல்லை:

ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை பயணம்

ஆச்சி மனோரமாவின் உண்மையான இயற்பெயர் கோபி சாந்தா, 1943 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மன்னார்குடி என்கின்ற இடத...